Tuesday, April 23, 2013

கவனிப்பார் யாருமில்லை


விலை அதிகம் 
வீண் செலவு, வேண்டாம்
வீட்டை அடைக்கும் என
பெற்றோர் மறுத்ததும்...
விசும்பலுடன் நகர்ந்து செல்லும்
குழந்தைகளை கண்டு 
"கோ" என கேவி அழுதன
 கடையிலுருந்த பொம்மைகள்...
கவனிப்பவர் தான் எவருமில்லை 



Thursday, September 27, 2012

அழுது அழுது கண்ணீரால்
உன் நினைவுகளை
அழித்து விடலாம் என்றால்
அமுதம் போல
ஒவ்வொரு சொட்டு கண்ணீரும்
ஆல மரமாய் வளர்க்கிறது
உன் மேல் - காதலை!!

Friday, August 10, 2012

தமிழ் மகன் !

ஈன்ற பொழுதில் பெரிதுவந்தேன்
"அம்மா..." என நீ சொல்ல கேட்டதும் 

Wednesday, August 1, 2012

The Stranger in the Mirror


Change they say is inevitable
But Who is that?
I see every day now, but hardly recognize
The Stranger, in the mirror

The clear eyes, the light hearted smile…
Easy happiness in the little things..
Innocent. I was. where was I now?
Rather what am i now? I wonder.

In the nights, on the cot
After all is still and quiet
waiting for that sleep, still eluding
I lie, search for me, as I remember  

I shut my eyes tightly
And search within
For a trace of me,
as I, long ago, had been

Dark it is… inside…
And quite heavy too
Nothing that I want to see
Nothing that I want to be…                                                         

Hot tears escape through…
Through, the closed eyes
And run down my cheeks
Before dying into the pillows…

Probably the last proof
Of my existence, as I once was
As I only and I, only, remember.
Change, they say is inevitable.

Thursday, July 26, 2012

I Live

when he smiles
when he laughs...
when he walks...
when he talks...
when he crawls...
even when he cries...
when he eats
when he refuses to...
when he dreams...
when he screams...
when he sleeps...
and when he breathes...
I live. I do.

Thursday, April 26, 2012

வேனிற்காலம்....

சுட்டு எரித்தாலும்
சுகம் குறைத்தாலும் ...

சுத்தமான
வெள்ளை வெயில் ...
சாலை ஓரம்
விற்பனைக்கு வரும்
சிவப்பு பிறை நிலவாய்,
தர்பூசணி...

காதலியின் கன்னத்தோடு
போட்டி போடும்
மல்கோவா மாம்பழங்கள்...

விடுமுறை அல்ல
தற்காலிக விடுதலை
என்று முழங்கும் குழந்தைகள்

மொட்டை மாடியில்
அம்மா இட்ட வற்றல் வடாம்...
தின்ன வரும்
திருட்டு  காக்காய்...

அதை  விரட்டி
வடகம்  காக்கும்
தாத்தாவின்  பழைய
கருப்பு  குடை...

கொதிக்கும் மணலில்
கோடை மழை
பட்டதும் புறப்படும்
அந்த... மண்வாசனை ...

வேனிற்காலம்....
அதன் அடையாளங்கள்
இன்னும் பல..
விரும்பத்தக்கது தான் ...

Monday, March 5, 2012

மன்னிப்பாயா?

உன் அழு குரலிலும்
இருக்கும் இனிமையில்
நான் தொலைந்து போவதினால்
எடுத்து சமாதானப்படுத்த
நேரமாகிவிடுகிறது... பல சமயங்களில்...