Thursday, April 26, 2012

வேனிற்காலம்....

சுட்டு எரித்தாலும்
சுகம் குறைத்தாலும் ...

சுத்தமான
வெள்ளை வெயில் ...
சாலை ஓரம்
விற்பனைக்கு வரும்
சிவப்பு பிறை நிலவாய்,
தர்பூசணி...

காதலியின் கன்னத்தோடு
போட்டி போடும்
மல்கோவா மாம்பழங்கள்...

விடுமுறை அல்ல
தற்காலிக விடுதலை
என்று முழங்கும் குழந்தைகள்

மொட்டை மாடியில்
அம்மா இட்ட வற்றல் வடாம்...
தின்ன வரும்
திருட்டு  காக்காய்...

அதை  விரட்டி
வடகம்  காக்கும்
தாத்தாவின்  பழைய
கருப்பு  குடை...

கொதிக்கும் மணலில்
கோடை மழை
பட்டதும் புறப்படும்
அந்த... மண்வாசனை ...

வேனிற்காலம்....
அதன் அடையாளங்கள்
இன்னும் பல..
விரும்பத்தக்கது தான் ...

1 comment:

Muruganandan M.K. said...

இனிய படைப்பு