Tuesday, April 26, 2011

ஆனையும் குதிரையுமாகி
சவாரிக்கு காத்து இருக்கின்றன
மாமனின் முதுகும்
தாத்தனின் தோள்களும்...
பால்குடி மடியை விட்டு
இறங்கத்தான் ,
இன்னும் மனமில்லை
எங்கள் ராஜகுமாரானுக்கு

மூன்று மாதங்கள் :-)

Wednesday, April 20, 2011

பணக்கார பிச்சை

ஆயிரங்களை அள்ளி குவிக்கும்
அவசரத்தில் அப்பா அம்மா
அலுவலகம் சென்றபின்னர்...
ஆயாவிடம் பிச்சை எடுக்கிறது பிள்ளை
அன்பிற்காக...

Monday, March 28, 2011

வேண்டுமே

இன்னும் இரு கண்கள் வேண்டும்
இருக்கும் கண்கள் இமைக்கும் போதும்
உன்னை காண...
இன்னும் இரு கண்கள் வேண்டும் எனக்கு

இனிக்கிறதே!

என் பெயரில்
இத்தனை இனிமையா!!
வியக்கிறேன்...
ஒவ்வொருமுறையும்
உன் உதடுகள்
உச்சரிக்கும்போது..

Monday, December 6, 2010

We are one :-)

We were two
This date, We became one
Soon we would be three
Still, we would be one
Later we may become fifty or a hundred
But we would be one.
We are one today.

Sunday, October 24, 2010

இனிக்கும் தென்றல்

இன்று என்ன தென்றலில்
தேன் கலந்தது போல
இப்படி ஒரு குளுமை, இனிமை ?
கண்டிப்பாக கலந்திருக்க வேண்டும்...
உன் மூச்சு காற்று.

Thursday, October 7, 2010

புதிய உறவு

கர்ப்பத்தில் புது உயிரை
காத்து வளர்க்கும்
மனைவியை
கவனிக்கும் பொருட்டு
தாயாகவும் புது உறவு கொள்கிறான்...
கணவன்.