Tuesday, July 8, 2008

கண்ணாடியின் கேள்வி

வாழ்க்கையே சலித்து போனது
விரக்தியில் கண்ணாடி முன்
வழக்கம் போல புலம்பினேன்
வாய் திறந்து பேசியது... கண்ணாடியா?

விடிந்து சலிததாக
ஆதவன் உரைப்பதில்லை
விதை சுமந்து வலிததாக
வயல் மண்ணும் சொன்னதில்லை
வீசி ஓய்ந்ததாக
குளிர் தென்றலும் தவித்ததில்லை
வளர்த்து, வாழ வைத்து சோர்ந்ததாக
தண்ணீர் சொல்லி கேட்டதில்லை
விரிந்து அசந்ததாக
வானமும் என்றும் சொன்னதில்லை

வெறும் சில காலம்
வாழும் உனக்கு மட்டும்
விரக்தி எதற்கு ?
கண்ணாடி கேட்டது.