Thursday, July 26, 2012

I Live

when he smiles
when he laughs...
when he walks...
when he talks...
when he crawls...
even when he cries...
when he eats
when he refuses to...
when he dreams...
when he screams...
when he sleeps...
and when he breathes...
I live. I do.

Thursday, April 26, 2012

வேனிற்காலம்....

சுட்டு எரித்தாலும்
சுகம் குறைத்தாலும் ...

சுத்தமான
வெள்ளை வெயில் ...
சாலை ஓரம்
விற்பனைக்கு வரும்
சிவப்பு பிறை நிலவாய்,
தர்பூசணி...

காதலியின் கன்னத்தோடு
போட்டி போடும்
மல்கோவா மாம்பழங்கள்...

விடுமுறை அல்ல
தற்காலிக விடுதலை
என்று முழங்கும் குழந்தைகள்

மொட்டை மாடியில்
அம்மா இட்ட வற்றல் வடாம்...
தின்ன வரும்
திருட்டு  காக்காய்...

அதை  விரட்டி
வடகம்  காக்கும்
தாத்தாவின்  பழைய
கருப்பு  குடை...

கொதிக்கும் மணலில்
கோடை மழை
பட்டதும் புறப்படும்
அந்த... மண்வாசனை ...

வேனிற்காலம்....
அதன் அடையாளங்கள்
இன்னும் பல..
விரும்பத்தக்கது தான் ...

Monday, March 5, 2012

மன்னிப்பாயா?

உன் அழு குரலிலும்
இருக்கும் இனிமையில்
நான் தொலைந்து போவதினால்
எடுத்து சமாதானப்படுத்த
நேரமாகிவிடுகிறது... பல சமயங்களில்...

Thursday, February 23, 2012

உயிரே போனது

உயிரே போனது...
உன் பொன் விரல்களை
தெரியாமல் தவறுதலாய்
நான் மிதித்துவிட்ட போது....

அழ துவங்கும் முன்
"நீயா வருத்தியது?" என
அதிர்ச்சி கலந்து என்னை நீ
இரு நொடி பார்த்த போது....

உயிரே போனது...

Friday, February 17, 2012

கண்ணீர்

மரித்துப்போன கனவுகளின்
மிச்சங்கள் தானோ ?

Wednesday, February 8, 2012

வாழ்க்கை ஒரு வட்டம்

விடுதியில் வளர்ந்த மகன்
இன்று என்னை
முதியோர் இல்லத்தில்
விட்டு செல்கிறான்

வாழ்க்கை ஒரு வட்டம்.

Tuesday, September 27, 2011

ஐந்திலக்க சம்பளம்
ஆண்டுக்கு இரு முறை போனஸ்
மேலாளர் பதவி
இன்னும் சில சலுகைகள்
இருந்தாலும்,
இவையாவும் ஈடாவதில்லை
என்னை வழியனுப்புகையில்
உன் கண்களில் வழியும் சோகத்திற்கு...