Saturday, May 24, 2008

விடியல் வெகுதூரமில்லை...

உன் பார்வை பட்டதெல்லாம்
எனக்கு புதிதாய் தோன்றியது
உன் கை தொட்டவையோ
எனக்கு பவித்திரமானது
உன் எல்லையில் வந்தவையே
இப்படி எனக்கு பொக்கிஷமாகியிருக்க
உன் அன்பை எனக்கு கிடைத்த
வைரம் என்பதா - இல்லை
இறைவன் எனக்களித்த
வரம் என்பதா?

வரம் என்றே சொல்லி இருந்தேன்
வருடங்கள் ஐந்து வரை
வெண் மேகங்களில் மிதந்து வந்தேன் உன்
வார்த்தைகளை கேட்கும் வரை
வாழ்வே நீ என்றுயிருந்தேன்
வெறும் விளையாட்டேன்று நீ மறுத்தாய்
வளரும் விரக்தியில் நான் விழுந்தேன்
வெளிச்சம் இழந்த வெண்ணிலவாய்
வண்ணம் ஒழிந்த வானவில்லாய் - நான்
வளரும் விரக்தியில் விழுந்தேன்.

மறக்க முடியாமல் நான் தவிக்க
மீண்டும் வந்தாய் மலர்களோடு
உயிர்த்து எழுந்தேன், எழுந்தாலும்
உடைத்த உண்மைகளும்
உடைந்த என் கனவுகளும்
உயர்ந்து எழுந்து நிற்கின்றன
நம்மிருவர் கண்முன்னே - ஆயினும்
நாளையின் நம்பிக்கை துளியும் - நாள்தொறும்
நீ காட்டும் பொறுமையும் கை கோர்க்க
நம் விடியல் வெகுதூரமில்லை...


This is based on a short story - a poignant tale of love, broken trust and remorse... the end was different - he leaves refusing to trust her the second time but after years, when he comes back and find her still waiting for him, he could only manage to tell "I wish I had believed you when I should have" before breaking down.
If only he had let go of his hurt feelings...

No comments: