Wednesday, October 22, 2008

Theory of Relativity

காதலித்து காத்திருந்தால்
என்றோ கண்டுபிடித்ததை
ஐன்ஸ்டீன் மிக
எளிதாக கண்டுபிடித்திருப்பாரோ?

Tuesday, October 21, 2008

கொடிது! கொடிது!!
இறங்கும் நம்பிக்கை...
இழக்கும் மன உறுதி...
இறப்பை விட கொடிது!!

Monday, October 13, 2008

நகரத்தில் நான்...

வாடிய பூக்களில்
வாசம் தேடும்
வண்ணத்துபூச்சி!

Sunday, October 12, 2008

இன்று நன்னாள்

நிலம் பார்த்தே தினம்
கடந்து செல்லும் நீ
நிமிர்ந்து என்னை பார்த்து
நடந்து சென்றாய் - இன்று
நிறைந்த நன்னாள்!!

Sunday, August 17, 2008

:-(

மொழியின் சதியால்
மௌனமே என் மொழியானதோ?

Thursday, July 24, 2008

வேண்டும்

குற்றமில்லாத பூமி வேண்டும்
சத்தமில்லாத சாலை வேண்டும்
நேர்மையான அரசியல் வேண்டும்
தூய்மையான காற்று வேண்டும்
வழுவாத ஒழுக்கம் வேண்டும்
நழுவாத வீரம் வேண்டும்
உண்மையான நண்பன் வேண்டும்
உலகத்துள் அமைதி வேண்டும்
வலுவான தேகம் வேண்டும்
வளமான வயல்கள் வேண்டும்
அச்சமில்லாத சுதந்திரம் வேண்டும்
அயர்வில்லாத உழைப்பு வேண்டும்
உள்ளத்தில் உண்மை வேண்டும்
உறவாட அன்னை வேண்டும்
குறையாத மகிழ்ச்சி வேண்டும்
குன்றாத நன்மைகள் வேண்டும்
இறவாத பக்தி வேண்டும்
இரக்கமுள்ள நெஞ்சம் வேண்டும்
அழியாத பெருமை வேண்டும்
அனைவருக்கும் இன்பம் வேண்டும்
எனக்கு இன்னொன்றும் வேண்டும் - அது
இக்கவிதை அச்சாக வேண்டும்

This is also written long back, during my school days for my school magazine. As i was dusting my book shelf i chanced upon the old magazines and it took me to the precious past... certainly one's school life is the best part of his life.

Wednesday, July 23, 2008

என்னால் மட்டும் இயன்றால்


உன் பூ இதழ்களில்
புன்னகையாய் பிறந்து
ஒளிர்ந்திட மாட்டேனா...
நீ கண்மூடி உறங்கையிலே
உன் கனவாய் வந்து
தாலாட்டிட மாட்டேனா...
சுவாச காற்றாக மாறி
உள்ளே சென்று உன் உயிர்
தொட்டிட மாட்டேனா...
விட்டு தூரம் போனாலும்
உன் உடன் வரும் நினைவுகளிலாவது
நான் வாழ்ந்திட மாட்டேனா...

Tuesday, July 22, 2008

Apples Rule the Land

Do these men have any brains?
Or Everything has been washed away by the rains?

They know not that the world belongs to the future
And fight for it and put everyone under torture

The hindus and muslims continue to fight
Without understanding that they are not right

They look for every opportunity to kill the others
Not knowing that they are also their own brothers

They dont realize that unity is happiness
But divide themselves and remain in darkness

An apple, seeing all the commotion said
"These men will soon be dead and their coffins laid
Then we apples will become the best
And lead the rest"

Its friend had a doubt...

"I agree to the world being led,
But by which apple - the green or the red?"

This is my first attempt to write, written long back and i still feel the pride that i felt when it was published in my school's annual magazine :-)

Tuesday, July 8, 2008

கண்ணாடியின் கேள்வி

வாழ்க்கையே சலித்து போனது
விரக்தியில் கண்ணாடி முன்
வழக்கம் போல புலம்பினேன்
வாய் திறந்து பேசியது... கண்ணாடியா?

விடிந்து சலிததாக
ஆதவன் உரைப்பதில்லை
விதை சுமந்து வலிததாக
வயல் மண்ணும் சொன்னதில்லை
வீசி ஓய்ந்ததாக
குளிர் தென்றலும் தவித்ததில்லை
வளர்த்து, வாழ வைத்து சோர்ந்ததாக
தண்ணீர் சொல்லி கேட்டதில்லை
விரிந்து அசந்ததாக
வானமும் என்றும் சொன்னதில்லை

வெறும் சில காலம்
வாழும் உனக்கு மட்டும்
விரக்தி எதற்கு ?
கண்ணாடி கேட்டது.

Thursday, July 3, 2008

தோல்வியில் பெருமை

தோற்று போன என்
முகத்தினில் பூரிப்பு பெருமை
என்னை வென்றது
என் மகனல்லவா...

Tuesday, June 24, 2008

சுறுசுறுப்பின் சாட்சி

ஒட்டடை குச்சியில்
வலை பின்னி முடித்தது
சிலந்தி!

Monday, June 23, 2008

வேலைக்கு போன தாய்

இரு வினாடிக்கும்
இடையே இருக்கும்
அந்த சிறு மணி துளியும்
அவளுக்கு அவன் நினைவு...

பால் மறக்கா செல்வத்தை
ஆயாவிடம் விட்டு விட்டு
பணம் சம்பாதிக்க
அலுவலகத்தில் அம்மா.

Friday, June 20, 2008

அட...

மழையில் நனைந்து
வெயிலில் உலர்கிறது
வானவில்!!

Thursday, June 19, 2008

என்ன செய்ய?

கனவிலாவது கலந்து
இருக்கலாமேனில்...
உறக்கமும் ஒத்துழைக்க
மறுக்கிறதே!

Tuesday, June 17, 2008

பார்வை

கொட்டிய காப்பியும்
கோலமாய் தெரிந்தது
தட்டி விட்டது...
நடை பழகும் மகள்!!

Monday, June 16, 2008

:-)

I am in zero but not in a hundred
I am in dough but not in the baker’s bread
I am in you but not in me
I am not in blue as you can see
I am in moon but not in night
I am now in hideout… find me if you might

I am the alphabet O :-)

ஒரு அறை வீடு ஆனது

காலை கடந்தும் சுருட்டாத பாய் - அதன்
காலடியில், கலைந்த
கோலத்தில், நேற்றிரவு
குளிர் காத்த கம்பிளி

மூன்று வாரமாய்
துடைப்பம் மறந்த தரை
முந்தா நாள் சாப்பிட்ட
மிச்சதுடன் எச்சில் தட்டு

துவைத்த வெள்ளை சட்டையும்
களைந்த கருப்பு சட்டையும்
ஒன்றாய் ஒற்றுமையாய்
கொடி ஓரத்தில் கசங்கியபடி...

பிரம்மச்சாரி அறையின்
அடையாளங்கள்...
அறையுடன் அனைத்தும்
காணமல் போனது

என் கை தாலிக்குரியவள்
எனக்குரியவள் ஆனபின்
என் மெட்டிக்குரியவள்
வீடு வந்தபின்...

Sunday, June 15, 2008

அப்பா

அழுக்கடைந்த பழுப்பு கைலி
அதற்கொவ்வாத அரை கை சட்டை
ஆகாய பார்வை
அலட்சிய நடை

அவன் பின்னால்
நேற்று நடை பழகிய
கோழி குஞ்சுகளாய்
குழந்தைகள் இரண்டு

அவன் சாலையை கடந்தான்
பிஞ்சு கால்களுடன்
தள்ளாடும் நடையுடன்
குழந்தைகளும் பின் நடந்தன

வண்டி வரும் சத்தம்...

விருட்டென்று திரும்பி
வேகமாய் நடந்து
குழந்தைகளை அணைத்தான்
தன் முரட்டு கைகளால்

இருவரையும் தூக்கி
இடுப்பில் வைத்து
சாலையை கடந்த பின்
இறக்கி விட்டான், நடக்க விட்டான்

அழுக்கான கைலி தான்
ஆயினும்... அப்பா....

Friday, June 13, 2008

சொல்ல மறந்த நன்றி...

தயங்கி நின்ற பொழுதெல்லாம்
தன்னம்பிக்கை அளித்த உன் குரலுக்கு...
தடுக்கி விழுந்த பொழுதெல்லாம்
தாங்கி பிடித்த உன் உறுதிக்கு...
கலங்கி இருந்த பொழுதெல்லாம்
கண்ணீர் துடைத்த உன் விரலுக்கு...
கண் மூடி உறங்கிய பொழுதெல்லாம்
சுகமாய் வருடிய உன் நினைவிற்கு...

Thursday, June 12, 2008

Everyday...
Begins with a prayer for your presence
and...
Ends with a whimper for your absence.

Thursday, June 5, 2008

பழைய நாட்கள்

அலுவலகம் முடிந்து
ஆறரை மணி
அரசு பேருந்தில்
அரைபட்டு வீடு வந்து
அக்கடாவென...
ஆசுவாச படுத்திக்கொள்ள
நாற்காலி தேடி...
முடிக்கவில்லை...

நான்கு மணிக்கே
பள்ளி விட்டு வந்து
காத்திருந்த ஆசை மகன்
கட்டி கொண்டான்...
"அம்மா... எனக்கு முதல் பரிசு!! "
தான் வரைந்த ஓவியத்தை
குதூகலத்தோடு...
கண் விரித்து காட்டினான்...

ஒரு கிராமத்து திருவிழா.
என் மகன் கை வண்ணம்
உட்கார நினைத்தவள்...
உற்று பார்க்கவே
கவனம் சிதறி
தவறி உள்ளே விழுந்தேன்
உள்ளே...
உள்ளே...

பளபளக்கும் புது
பச்சை பாவாடை...
தரையை விட்டு
தள்ளி பறக்கும் கால்கள்...
கையில் கட்டியிருக்கும்
இனிப்பு கடிகாரம்
உதட்டில் ஒட்டியிருக்கும்
மிச்ச பஞ்சு மிட்டாய்...

எங்கேயோ பார்த்த முகம்?
யார் அது?
பல வருடம் முன்...
இருந்த என்னை போலவே?
அட!
நான் தான் அது...
பச்சை பாவாடையில்
நானே தான் அது!

சுற்றி பார்க்கிறேன்
திரும்பி பார்க்கிறேன்...
என் கிராமத்து திருவிழா...

வருவோரை வரவேற்கும்
வாழை மர தோரணம்...
வந்தோரை வாழவைக்கும்
விசாலாட்சி அம்மன் கோவில்...
வாசலில் பொங்கல் பானை
வழிஎங்கும் புதுநெய் வாசனை...
வளையல் செட்டியார் முன்
வரிசையாய் என் தோழிகள்...

கடந்து போகிறேன்...
இன்னும் பார்க்கிறேன்...

உயரம் குறைச்சலானாலும்
உற்சாகம் குறைக்காத ராட்டினம்...
ஒரு ஓரமாக நடக்கும்
ஒய்யார சேவல் சண்டை...
பொங்கலுக்கு ஊருக்கு வந்திருக்கும்
தீபாவளி கழிந்து
புகுந்த வீடு போன
பக்கத்து வீட்டு அக்கா...

எங்கேயோ எப்போதோ
மறந்து போன...
வயிற்று போராட்டத்தில்
தொலைந்து போன...
ஆறரை மணி கூட்டத்தில்
அமிழ்ந்து போன...
பழைய நாட்கள்...
பொக்கிஷங்கள்...

"பிடித்திருககா ?" - மகனின் கேள்வி
"ம்ம்ம்ம்... ரொம்ப"




Wednesday, June 4, 2008

விலங்கு

பக்கத்து வீட்டிற்கு
புதிதாய் வந்திருந்தனர்
அம்மா அப்பா மற்றும்,
அவர் குழந்தைகள் இருவர்.

கட்டில் மெத்தை
அலமாரிகள் மூன்று
இன்ன பிற இதர நாற்காலிகள்
இன்னும் பிரிக்காத
மூட்டை முடிச்சுகள் பல...

எடுத்து வந்தவற்றை
இரவு வரை அடுக்கி வைத்து
கோலமிட்டு பால் காய்ச்சி
குடித்தனம் துவங்கினர்.

மூன்று நாட்கள்
முடிந்தன...

ஆரம்ப குறுகுறு பார்வை
முடிந்து, பார்த்தால்
குறுநகை பூக்கும்
பழக்கம் இப்போது...

மறுநாள் காலை...

வாசல் படியில்
வெள்ளை பூனை ஒன்று....
வழக்கம் போல பால்
திருட வந்ததென,
வேலைக்காரி
விரட்ட கை ஓங்க...
வெறுமையாய்... வேதனையாய்...
தலை சாய்த்து பார்த்தது...

எங்கள் பூனை!
சொந்தம் கொண்டாடினான்
பக்கத்து வீட்டின்
புது சிறுவன்

விசாரித்ததில்...

வயதாகி போனதென
வளர்த்த பூனை இனி
வேண்டாமென வந்திருந்தனர்
வாயில்லா அந்த பிராணியோ,
பழகிய பாசம்
மறக்காமல், தேடி...
வழி கண்டுபிடித்து
பின் வந்திருக்கிறது...

விட்டு விட்டு வந்த
வீட்டு "மனிதர்" உள்ளே...
விடாமல் வந்த
"விலங்கு" வெளியே...

Friday, May 30, 2008

பார்த்தும் பறந்தது

பல நாள் கழித்து
பட்டாம்பூச்சி ஒன்றை
பார்த்தேன் நேற்று
சிறகடித்து பறந்தது
மனசு...

Wednesday, May 28, 2008

தள்ளி வந்து தனியே இருக்கையிலே

தலை வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் - அதுவும்
தன்னந்தனியே இருக்கும் போது வந்தால்...
தெரியும்.
அம்மாவின் அருமை புரியும்.

Tuesday, May 27, 2008

I have company

Thanks God!!
You created loneliness
Else I would be alone...

உன்னை பிடிக்கிறது

மூன்றாம் பிறைக்கு
முதல் நாள் வரும் வெள்ளி நிலவு
முழுக்க மூடாத
மேகத்தின் வழி கசியும் கதிரொளி
மகன் உறங்க
அறுப்புக்கு நடுவே தாய் பாடும் தாலாட்டு
மூழ்க விடாத
சித்திரை மாத சிற்றாற்று குளியல்
மறுபடி மறுபடி
ரசித்தாலும் சலிக்காத மழலை சிரிப்பு
மணிகணக்கில்லாமல் கொட்டும்
ஜன்னலோர கார்த்திகை மழை
உனக்கு பிடித்தவை எல்லாம்...
எனக்கு பிடிக்கிறது
உன்னை பிடித்ததனால்...

Monday, May 26, 2008

ஒற்றை மின்னல்...

இருட்டை அரைத்து பூசிய
கருப்பு கரிசல் காட்டை
வெள்ளி மின்னலோன்று கிழிக்கின்றதே!!
அம்மாவின் ஒற்றை நரை முடி...

Saturday, May 24, 2008

விடியல் வெகுதூரமில்லை...

உன் பார்வை பட்டதெல்லாம்
எனக்கு புதிதாய் தோன்றியது
உன் கை தொட்டவையோ
எனக்கு பவித்திரமானது
உன் எல்லையில் வந்தவையே
இப்படி எனக்கு பொக்கிஷமாகியிருக்க
உன் அன்பை எனக்கு கிடைத்த
வைரம் என்பதா - இல்லை
இறைவன் எனக்களித்த
வரம் என்பதா?

வரம் என்றே சொல்லி இருந்தேன்
வருடங்கள் ஐந்து வரை
வெண் மேகங்களில் மிதந்து வந்தேன் உன்
வார்த்தைகளை கேட்கும் வரை
வாழ்வே நீ என்றுயிருந்தேன்
வெறும் விளையாட்டேன்று நீ மறுத்தாய்
வளரும் விரக்தியில் நான் விழுந்தேன்
வெளிச்சம் இழந்த வெண்ணிலவாய்
வண்ணம் ஒழிந்த வானவில்லாய் - நான்
வளரும் விரக்தியில் விழுந்தேன்.

மறக்க முடியாமல் நான் தவிக்க
மீண்டும் வந்தாய் மலர்களோடு
உயிர்த்து எழுந்தேன், எழுந்தாலும்
உடைத்த உண்மைகளும்
உடைந்த என் கனவுகளும்
உயர்ந்து எழுந்து நிற்கின்றன
நம்மிருவர் கண்முன்னே - ஆயினும்
நாளையின் நம்பிக்கை துளியும் - நாள்தொறும்
நீ காட்டும் பொறுமையும் கை கோர்க்க
நம் விடியல் வெகுதூரமில்லை...


This is based on a short story - a poignant tale of love, broken trust and remorse... the end was different - he leaves refusing to trust her the second time but after years, when he comes back and find her still waiting for him, he could only manage to tell "I wish I had believed you when I should have" before breaking down.
If only he had let go of his hurt feelings...

Friday, May 23, 2008

I wait...


As the days grow and become a week
Your silence makes me just more weak
With strength left my heart seeks
the day we would meet and speak
As the night creeps to dawn
When even the moon begins to yawn
I wait, still wait for the ring
From the person who makes my heart sing
Love's silence is the worst of the woes
punishment, i wouldnt present to my foes
Call me, call now, my mate
Dont keep me waiting this late

Thursday, May 22, 2008

அடகு கடையில் நம் அன்னை பூமி

பணமே பிரதானம் என்போருக்கே
பதவி பிரமாணம் இங்கு
ஒத்து ஊதும் அதிகாரிக்கு
பாராட்டு பரிவட்டம்
ஒத்துழைக்க மறுப்போருக்கு
பணியிட மாற்றம்
ஓட்டு போட்டு நாட்டை
ஒழுக்க படுத்த வேண்டியவரோ
குடமா குத்து விளககா
ஓரமாக பேரம் பேசிய களைப்பில்
அரியணையில் அழுக்கு அரசியல்வாதிகளின்
அன்னை பூமியோ அடகுகடையில் :-(

Tuesday, May 20, 2008

என்ன நியாயம்?

தேர்வுகளில் தேறிவர
தேங்காய் உடைக்க
பிள்ளையை பழக்கி விட்டு
படித்து முடித்தபின்
பின்னாளில், அவன்
பாவி, லஞ்சம் வாங்குகிறான் என்பதா?

Monday, May 19, 2008

கேள்வி? வேள்வி!

காதல் என்பது என்ன?
விளக்கம் கேட்ட நண்பனுக்காக
வெகுநேரம் தேடி தெளிந்தேன்...
காதல் என்பது...
வார்த்தைகளால் வரையறுக்க படுவதில்லை...
வர்ணனைகளால் விலங்கிட முடிவதில்லை...
காதல் என்பது...
வாழ்ந்து பார்ப்பதே யாம்!!

Thursday, May 15, 2008

Days to go

I don’t want the television as my only company
And I don’t want the uncontested remote
I don’t want to learn cooking in correspondence
And I don’t want to keep looking at the irctc
I don’t want to come back to a locked house
And I don’t want to wake up to be alone…
Days to go before I'm home
Days to go before I'm home...

Tuesday, May 13, 2008

Friend's Silence... Alas...

Had I the wings of a bird
I would flutter until all your tears are dried
Had I the waves of the Ocean
I would wipe every memory to leave your heart clean
Had I the colors of the rainbow
I would shine until smile is what you remember and know
Had I the cure of the time
I would take you to the day very very far away…
Alas...

Sunday, May 11, 2008

காவிரிக்கு கதவடைப்பா?

கண்ணீர் மட்டும்
கரிக்கவில்லைஎனில்
காவிரி எதற்கு எங்களுக்கு
கண்ணிரண்டு போதும் எம்
கருப்பு விவசாயிக்கு

கதிரறுக்கும் கனவுகள்
காணாமல் போன பின்
குடிக்கும் ஒரு குவளை நீரும்
கானலாகி போனால்
கதையில்லை எம்குல வாழ்விற்கு...

Saturday, May 10, 2008

என் சபதம்



நாளை முதல் நல்லுணவு மட்டும்
நேற்று கொண்ட அதே சபதத்தோடு,
இன்று, பிட்சா கார்னரில் நான்!

Friday, May 9, 2008

Who stole my seasons?

Its not summer when I see the bright blue sky
Its not summer when all around small birds fly
Its not summer when you are far away
Its not summer when I miss you everyday…

Its not autumn when the leaves clothe the land
Its not autumn when the breeze sifts the sand
Its not autumn when the yellow is in display
Its not autumn when I miss you everyday…

Its not spring when fruits look a ruddy hue
Its not spring when brooks are bouncing through
Its not spring when the fields are gay
Its not spring when I miss you everyday…

Its not winter when water feels cold next to ice
Its not winter when the sun peeps for just a trice
Its not winter when you are far away...
Its not winter when I miss you everyday…

Thursday, May 8, 2008

ஓ!



ஊழல் பணத்தை
ஒழிக்க வேண்டினோம்
ஒளித்து வாங்கினான்
ஓ... அரசியல்வாதி!

Tuesday, May 6, 2008

பாரங்கள்... கனப்பதில்லை...


பெண் கழுத்திலிருக்கும்
பொன் தாலி...
அவள் கொண்டிருக்கும்
வயிற்று பிள்ளை...
தந்தை தோளில்
திருவிழா காணும் மகன்...
பிள்ளை படிப்பிற்கு பணமாகும்
பெற்றோர் தலை விறகு...
களைத்திருக்கும் மாமனுக்கு
கொண்டுசெல்லும் கஞ்சிக்களையம்
ஓ! சுகமான சுமைகள்!!

Monday, May 5, 2008

இனிக்கும் இடைஞ்சல்கள் !!

கைகளில் மருதாணி சிவக்கையில்
பின்முதுகில் எதையோ தேடும் ஈ...
சூடியிருக்கும் ஒற்றை சிகப்பு ரோஜா
பார்க்க முடியாத தூரத்தில் கண்கள்...
காற்றோடு காதல் கொண்டு
கொட்டும் மழையில் ஓடி போகும் குடை...
என்னருகில் நீ இருந்தும்
ஏறிட்டு பார்க்க விடாத வெட்கம் !!

As soon as i reached home loaded with my new salary...

Scrutinizing me from head to the tiny toe was my dear mom
Searching for the flaws – faults due to her absence
Fretting over the lost milligram in my weight
And fussing over her home-coming dearest daughter
Brother hovering around for more my office stories
And telling me the progress on his new lorries
With a proud smile, he showed his stylish new shirts
As a kid who shows his hard won laurels to his mother
Dad was silent, not a word spoken but responsible for the cheese
Cherry and gems that found their way suddenly into the house and into the refrigerator
With the same speed they were hidden behind, knowing my unease
Scolding mom for that extra chilli in the curry that would hurt me
Love has different forms, not always the same…
Mother’s spate, Brother’s subdued, Dad’s silent…
Oh My God!! What have I traded for…
Oh My God!! For What have I traded for….